Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

ராகுல்காந்தி இன்று சென்னை வருகை; முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து பேசுகிறார்

ராகுல்காந்தி இன்று சென்னை வருகை; முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து பேசுகிறார்

இந்தியக் கல்வித் துறையில் நிலவும் முறைகேடுகள், நீட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, கல்விக் கட்டண உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்சினைகளால் மாணவர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகள் குறித்து நேரடியாகக் கேட்டறியும் வகையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ‘மாணவர்களின் குரல்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, மகாராஷ்டிர மாநிலத்தின் புனே, நாசிக் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, இன்று (சனிக்கிழமை) சென்னை தீவுத்திடலில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார். பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம் ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்பாட்டுப் பணிகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் குலாம் அகமது மிர், இணைப் பொறுப்பாளர் நிவேதித் ஆல்வா, அமைச்சர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதல்வர் விஜய்யுடன் இன்று சந்திப்பு மாணவர்களுடனான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அதன்பிறகு, மதியம் 1.30 மணியளவில் நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய்யின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசுகிறார்.

Advertisement
தொடர்ந்து, மாலை 5 மணியளவில் சென்னை தீவுத்திடலில் நடைபெறும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தமிழ்நாடு முழுவதும் இணையதளம் மற்றும் கியூ.ஆர். குறியீடு வாயிலாக மாணவர்களிடம் இருந்து பதிவுகள் பெறப்பட்டன. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 10 ஆயிரம் மாணவர்களுக்கு மட்டுமே அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அடையாள அட்டை பெற்றவர்கள் மட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர். நிகழ்ச்சியை நேரில் காண வரும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, பந்தலுக்கு வெளியேயும் பெரிய திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பந்தலுக்கு வெளியே இருப்பவர்களும் நிகழ்ச்சியைக் காண முடியும். மேலும், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள் மற்றும் முன்னாள் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் 350 பேருக்கு மட்டும் தனியாக இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இரவு டெல்லி புறப்படுகிறார் சென்னையில் தங்கியிருக்கும் ராகுல் காந்தி, மாணவர்களுடனான நிகழ்ச்சிக்கு முன்னதாகத் தாஜ் கன்னிமாரா ஓட்டலில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களைச் சந்திக்கிறார். நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், இரவு 9.30 மணியளவில் விமானம் மூலம் அவர் டெல்லிக்குப் புறப்பட உள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு