Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

இறப்பிலும் இணை பிரியாத காதல் தம்பதி: மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவரும் உயிரிழப்பு

இறப்பிலும் இணை பிரியாத காதல் தம்பதி: மனைவி இறந்த ஒரு மணி நேரத்தில் கணவரும் உயிரிழப்பு

சென்னை திருவொற்றியூரில், மனைவி உயிரிழந்த ஒரு மணி நேரத்திலேயே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது கணவரும் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவொற்றூர் எல்லையம்மன் கோவில் நல்ல தண்ணீர் ஓடைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் பக்கிரி (75). காவலாளியாகப் பணியாற்றி வந்த இவர், 46 ஆண்டுகளுக்கு முன்பு குப்புலட்சுமி (68) என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு சசிகலா (45), சந்திரகலா (43) என இரண்டு மகள்களும், சசிகுமார் (42), சரத்குமார் (41), சம்பத்குமார் (40) என மூன்று மகன்களும் உள்ளனர். கடந்த 2-ம் தேதி பக்கிரிக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

Advertisement
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவரைப் பார்ப்பதற்காக குப்புலட்சுமி நேற்று வீட்டிலிருந்து புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டிலேயே மயங்கி விழுந்த அவர் உயிரிழந்தார். கணவரைப் பார்க்கச் செல்லத் தயாரான நிலையில் குப்புலட்சுமி உயிரிழந்தது குடும்பத்தினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனைவி உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பக்கிரியும் உயிரிழந்தார். காதலித்து திருமணம் செய்து 46 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த தம்பதியினர், அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அவர்களது பிள்ளைகள், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களைத் தீராத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு