Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 24 அக்டோபர் 2026 | 7 ஐப்பசி பராபவ வருடம்

மேட்டுப்பாளையம் - உதகை மண்சரிவு: 150-க்கும் மேற்பட்ட கேரள மாணவர்கள் பத்திரமாக மீட்பு

மேட்டுப்பாளையம் - உதகை மண்சரிவு: 150-க்கும் மேற்பட்ட கேரள மாணவர்கள் பத்திரமாக மீட்பு

கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் மேட்டுப்பாளையம் - உதகை மலைப்பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கிய கேரளாவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண் சரிந்து விழுந்துள்ளது. இதனால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலையில் 14 இடங்களிலும், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் 3 இடங்களிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

Advertisement
இதன் காரணமாக இரு சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, மேட்டுப்பாளையம் - உதகை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சுற்றுலாப் பயணிகள் சிலர் சிக்கினர். அவர்களில், கேரளாவில் இருந்து சுற்றுலா வந்திருந்த 150-க்கும் மேற்பட்ட மாணவர்களும் இருந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மண்சரிவில் சிக்கிய மாணவர்களை கயிறுகளின் உதவியுடன் மீட்ட அவர்கள், அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு