Skip to main content
🌤️ —°C
புதன் | 29 ஜூலை 2026 | 13 ஆடி பராபவ வருடம்

மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக்கூட வைக்க முடியாது; அமைச்சர் செங்கோட்டையன்

மேகதாது அணை கட்ட ஒரு செங்கல்லைக்கூட வைக்க முடியாது; அமைச்சர் செங்கோட்டையன்
மேகதாது அணை திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்த எந்த வகையிலும் அனுமதிக்கப்படாது என்றும், தமிழக முதல்வராக விஜய் பதவியில் இருக்கும் வரை அந்த திட்டத்திற்காக ஒரு செங்கல்லைக்கூட எடுத்து வைக்க முடியாது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதியாக தெரிவித்தார்.ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி நீர் தொடர்பான விவகாரங்களில் தமிழகத்தின் பிரதிநிதிகள் கர்நாடகா செல்வது புதிய விஷயம் அல்ல என்றும், அதிமுக ஆட்சிக்காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சி.வி.சண்முகமும் கர்நாடகா சென்றிருந்ததாக நினைவுபடுத்தினார். மேகதாது அணை தொடர்பான விவகாரத்தில் திட்டம் முழுமையாக பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறிய அமைச்சர், தற்போதைய தமிழக அரசு அந்த அணை கட்டப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தெரிவித்தார்.மேலும், மாநிலத்தின் எந்தெந்த பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது என்பதை கண்டறிய ஆய்வுகள் நடைபெற்று வருவதாகவும், நிலத்தடி நீர் வளம் உள்ள பகுதிகளை அடையாளம் காணும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், அவை வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு