Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 06 செப்டம்பர் 2026 | 21 ஆவணி பராபவ வருடம்

மூக்கையா தேவரின் சேவை என்றும் போற்றத்தக்கது - நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

மூக்கையா தேவரின் சேவை என்றும் போற்றத்தக்கது - நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

அகில இந்திய பார்வர்டு பிளாக் இயக்கத்தின் முக்கியத் தலைவராகவும், தென் தமிழக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவராகவும் விளங்கிய “உறங்காப்புலி” பி.கே. மூக்கையா தேவரின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.இதையொட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், மூக்கையா தேவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.அவர் தனது பதிவில், அரசியலைத் தாண்டி ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கு கல்வியே அடிப்படை என்பதை உணர்ந்து மூக்கையா தேவர் செயல்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சமூகத்தில் பின்தங்கிய மக்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில் கள்ளர் கல்விக் கழகத்தை அவர் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.மேலும், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரில் உசிலம்பட்டி, கமுதி, மேலநீலிதநல்லூர் ஆகிய பகுதிகளில் கல்லூரிகள் உருவாகவும் மூக்கையா தேவர் முக்கிய பங்களிப்பு செய்ததாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.“உறங்காப்புலி” என போற்றப்பட்ட பி.கே.

Advertisement
மூக்கையா தேவரின் பொதுவாழ்க்கையையும், மக்களுக்காகவும் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும் அவர் ஆற்றிய பணிகளையும் நினைவுகூர்ந்து இந்நாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு