Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 06 செப்டம்பர் 2026 | 21 ஆவணி பராபவ வருடம்

தீபாவளி முன்பதிவு; தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

தீபாவளி முன்பதிவு; தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

தீபாவளி பண்டிகை நவம்பர் 8-ந்தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் முன்கூட்டியே தங்கள் பயணத்தைத் திட்டமிடும் வகையில், 60 நாட்களுக்கு முன்பே ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.அதன்படி, தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5-ந்தேதி (வியாழக்கிழமை) சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்யும் பயணிகளுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கியது.பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி.

Advertisement
இணையதளம், செல்போன் செயலி மற்றும் ரெயில் நிலையங்களில் செயல்படும் டிக்கெட் கவுண்ட்டர்கள் மூலம் முன்பதிவு செய்தனர். முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் பெருமளவில் விற்றுத் தீர்ந்தன.குறிப்பாக, தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களில் பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதைத்தொடர்ந்து, தீபாவளி பயணத்துக்கான அடுத்தடுத்த தேதிகளுக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவும் வரும் நாட்களில் நடைபெற உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு