Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
ஞாயிறு | 13 செப்டம்பர் 2026 | 28 ஆவணி பராபவ வருடம்

முதல் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

முதல் 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியா-ஆப்கானிஸ்தான் இன்று மோதல்

இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரின் முதல் ஆட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. தொடரின் அனைத்து போட்டிகளும் டெல்லியிலேயே நடைபெறுகின்றன. இதன் முதல் போட்டி இன்று அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2-வது போட்டி 15-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 17-ந்தேதியும் நடைபெற உள்ளன. 20 ஓவர் அணியின் கேப்டன் பொறுப்பை ஸ்ரேயாஸ் அய்யர் ஏற்ற பிறகு, இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடும் முதல் தொடராக இது அமைந்துள்ளது. உலகக்கோப்பைக்கு பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான தொடரை 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 0-4 என்ற கணக்கிலும் இழந்தது. இதையடுத்து நடைபெற்ற ஜிம்பாப்வே தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி இந்திய அணி வெற்றிக்கு திரும்பியது. ஆசிய விளையாட்டு போட்டிக்கான தயாரிப்பில் இந்த தொடரை பயன்படுத்திக்கொள்ள இரு அணிகளும் எதிர்பார்க்கின்றன. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி, உள்ளூர் மைதானத்தின் சாதகமான சூழலுடன் நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. மறுபுறம், இந்தியாவுக்கு எதிராக இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 18 போட்டிகளில் விளையாடியுள்ள ஆப்கானிஸ்தான், ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றதில்லை. இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ள நிலையில், இரண்டிலும் ஆப்கானிஸ்தான் தோல்வியடைந்துள்ளது.

Advertisement
7 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6-ல் தோல்வியும், ஒரு போட்டியில் சமனும் கண்டுள்ளது. 20 ஓவர் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 9 முறை களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 8 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் நிறைவடைந்தது. எனவே, இந்தியாவுக்கு எதிரான முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் ஆப்கானிஸ்தான் அணி களம் காணும். தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் முயற்சிக்கும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் பரபரப்பான போட்டியை எதிர்பார்க்கலாம். இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 மற்றும் சோனி மேக்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்புகின்றன. இரு அணிகளின் உத்தேச வீரர்கள்: இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் அல்லது வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), திலக் வர்மா, அக்ஷர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி. ஆப்கானிஸ்தான்:ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன் (கேப்டன்), குல்படின் நைப், செடியுல்லா அடல், டார்விஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், முகமது நபி, ரஷித் கான், முஜுப் உர் ரஹ்மான், நூர் அகமது, பசல்ஹக் பரூக்கி அல்லது நவீன் உல்-ஹக்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு