முதலாவது ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அங்கு நடைபெற்ற 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை) ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான டாஸ் சற்றுமுன் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில், முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.