மாமன்னர் பூலித்தேவர் பிறந்தநாள்: டிடிவி தினகரன் புகழாரம்
மாமன்னர் பூலித்தேவரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதையடுத்து, தனது எக்ஸ் தளத்தில் டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், நெற்கட்டும்செவலை தலைமையிடமாகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தவரும், அந்நியர்களின் ஆதிக்கத்தை ஏற்க மறுத்து துணிச்சலுடன் எதிர்த்து நின்ற முன்னோடித் தமிழர்களில் முக்கியமானவருமான பூலித்தேவரின் பிறந்தநாள் இன்று என குறிப்பிட்டுள்ளார்.மேலும், ஆங்கிலேயர்களின் படைபலத்துக்கு அஞ்சாமல் தாய்மண்ணைப் பாதுகாக்க தொடர்ந்து போராடிய பூலித்தேவர் பல்வேறு வெற்றிகளைப் பெற்றதாகவும், அவரது வீரமும் விடுதலை உணர்வும் மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.பூலித்தேவரின் துணிச்சலையும் தியாகத்தையும் என்றும் போற்றி வணங்குவோம் என்றும் டிடிவி தினகரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.