Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
ஞாயிறு | 06 செப்டம்பர் 2026 | 21 ஆவணி பராபவ வருடம்

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்... இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும்

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்... இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பாஸிற்காக, பள்ளிக்கல்வித்துறையின் ‘எமிஸ்’ இணையதளம் மூலம் 70 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஸ்மார்ட் பஸ் பாஸ் அச்சிடும் பணிகள் இந்த வாரம் தொடங்கும் என போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவர்கள், பள்ளிக்குச் சென்று வருவதற்காக 30 கிலோமீட்டர் தூரம் வரை இலவசமாக பயணம் செய்யும் வகையில் ஆண்டுதோறும் பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. மாணவர்களின் விவரங்கள் பள்ளிக்கல்வித்துறையின் ‘எமிஸ்’ தளம் மூலம் போக்குவரத்துக்கழகங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மதுரை, கோவை, விழுப்புரம், சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 8 போக்குவரத்துக்கழக கோட்டங்களில் இருந்து 70 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பஸ் பாஸ் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை கோட்டத்தில் மட்டும் 9.13 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

Advertisement
பஸ் பாஸ்கள் ஆகஸ்டு 31-ந்தேதிக்குள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஸ்மார்ட் பஸ் பாஸ் அச்சிடும் பணிகள் தாமதமானது. இந்நிலையில், இந்த வாரம் பஸ் பாஸ் அச்சிடும் பணிகள் தொடங்க உள்ளன. தொடர்ந்து செப்டம்பர் மாத இறுதிக்குள் பஸ் பாஸ்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய பஸ் பாஸ் கிடைக்கும் வரை மாணவர்கள் தங்களிடம் ஏற்கனவே உள்ள பழைய பஸ் பாஸை பயன்படுத்தி பயணம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி சீருடையில் வரும் மாணவர்களை பஸ் பாஸ் வைத்திருப்பவர்களாக கருதி பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்குமாறு நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு