Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 21 செப்டம்பர் 2026 | 5 புரட்டாசி பராபவ வருடம்

மராட்டியம்: விநாயகர் சிலை கரைப்பின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

மராட்டியம்: விநாயகர் சிலை கரைப்பின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழா நிறைவையொட்டி விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இயற்கை நீர்நிலைகள் இல்லாத இடங்களில் செயற்கை குளங்கள் அமைக்கப்பட்டும் சிலைகள் கரைக்கப்பட்டன. அந்த வகையில், மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஷியாம் நகர் பகுதியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக செயற்கை குளம் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை அந்த குளத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குளம் மூடப்பட்டது.

Advertisement
இந்நிலையில், நேற்று மாலை அப்பகுதியைச் சேர்ந்த ரோகித் ரதோர் (19) என்பவர் விநாயகர் சிலையை கரைப்பதற்காக அந்த செயற்கை குளத்திற்குள் இறங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார கம்பி ஒன்று குளத்திற்குள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் குளம் முழுவதும் மின்சாரம் பாய்ந்த நிலையில், ரோகித் ரதோர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹107.77
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு