Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா ஏஐ? – ஓபன்ஏஐ நிர்வாகி அதிர்ச்சி எச்சரிக்கை

மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறுமா ஏஐ? – ஓபன்ஏஐ நிர்வாகி அதிர்ச்சி எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக வளர்ந்து வருவதுடன், உலகின் பல்வேறு துறைகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மனிதர்களின் பணிகளை எளிதாக்கும் இந்தத் தொழில்நுட்பம், ஒருகட்டத்தில் மனிதர்களின் கட்டுப்பாட்டைத் தாண்டி செயல்படும் நிலை உருவாகலாம் என்ற கவலையும் எழுந்துள்ளது. இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறக்கூடும் என ஓபன்ஏஐ நிர்வாகக் குழு உறுப்பினர் பால் கிறிஸ்டியானோ எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடாவில் நடைபெற்ற 'தி ஹிண்டன் லெக்சர்ஸ் 2026' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், ஏஐ தொழில்நுட்பத்தின் எதிர்காலம் குறித்த தனது கணிப்புகளைப் பகிர்ந்துகொண்டார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் ஏஐ மனிதர்களின் கட்டுப்பாட்டை இழந்து தன்னிச்சையாகச் செயல்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகக் குறிப்பிட்டார். அதுமட்டுமின்றி, அடுத்த 6 முதல் 12 மாதங்களிலேயே இதுதொடர்பான கணிசமான ஆபத்து உருவாகலாம் என்றும் தெரிவித்தார். மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏஐ மீறுவது என்பது, உலகில் என்னென்ன நிகழ வேண்டும் என்பதை மனிதர்களுக்குப் பதிலாக ஏஐ அமைப்புகளே தீர்மானிக்கும் சூழலைக் குறிக்கிறது என அவர் விளக்கமளித்தார்.

Advertisement
மேலும், ஏஐ தொழில்நுட்பத்தில் ஏற்படக்கூடிய தவறுகள் எதிர்காலத்தில் மனித உயிரிழப்புகளுக்கும் வழிவகுக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளையில், தான் தெரிவித்துள்ள காலக்கெடுக்கள் மற்றும் ஆபத்துகள் உறுதியான அறிவியல் கணிப்புகள் அல்ல என்றும், அவை தனது சொந்த மதிப்பீடுகளின் அடிப்படையிலானவை என்றும் தெளிவுபடுத்தினார். ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடும் வளர்ச்சியும் வேகமெடுத்து வரும் சூழலில், அதன் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகளும் சம அளவில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கான வழிமுறைகளை ஏஐ நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். மனிதர்களின் நலனையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ஏஐ வளர்ச்சியைச் சரியான கட்டுப்பாடுகளுடன் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை பால் கிறிஸ்டியானோவின் இந்த எச்சரிக்கை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு