தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், திமுக நிறுவனருமான பேரறிஞர் சி.என்.அண்ணாதுரையின் 118-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் அண்ணாவை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார். அதில், பேரறிஞர் அண்ணாதுரை மதுவிலக்குக் கொள்கையில் உறுதியுடன் இருந்தவர் என்றும், ஊழல் மற்றும் குடும்ப அரசியலுக்கு எதிராக தனது வாழ்வை அமைத்துக் கொண்டவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
மேலும், தனது அரசியல் பயணத்தில் எளிமையையும் நேர்மையையும் கடைப்பிடித்த அண்ணா, தமிழகம் கண்ட எளிமையான தலைவர்களில் ஒருவர் என அண்ணாமலை புகழாரம் சூட்டியுள்ளார். அவரது நினைவைப் போற்றி வணங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.