Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

மதுரை கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை

மதுரை கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை

ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கும் முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், அதில் இடம்பெற்றுள்ள கமலினிக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், கமலினியின் சாதனையை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Advertisement
திறமைமிக்க விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என்றும், கமலினியின் வெற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். கமலினி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு