மதுரை கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

மதுரை கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை

மதுரை கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை

ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த கிரிக்கெட் வீராங்கனை கமலினிக்கும் முதல்-அமைச்சர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், அதில் இடம்பெற்றுள்ள கமலினிக்கும் தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், கமலினியின் சாதனையை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். திறமைமிக்க விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஆதரவாக இருக்கும் என்றும், கமலினியின் வெற்றி தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய ஊக்கத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். கமலினி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.