Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 14 ஆகஸ்ட் 2026 | 29 ஆடி பராபவ வருடம்

மதுரையில் கல்வியை மையமாகக் கொண்ட சர்வதேச திரைப்பட விழா – ஆகஸ்ட் 9-ம் தேதி இலவச திரையிடல்

மதுரையில் கல்வியை மையமாகக் கொண்ட சர்வதேச திரைப்பட விழா – ஆகஸ்ட் 9-ம் தேதி இலவச திரையிடல்
மதுரை: கல்வி, மாணவர்கள், சமூக மாற்றம் மற்றும் கற்றல் அனுபவங்களை மையமாகக் கொண்ட திரைப்படங்களை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் "Film Festival on Education" திரைப்பட விழா வருகிற ஆகஸ்ட் 9, 2026 (ஞாயிற்றுக்கிழமை) மதுரையில் நடைபெற உள்ளது. மதுரையின் லென்ஸ் மீடியா சென்டர் (LENS Media Centre), லயோலா ஐடிஐ வளாகம், ஞான ஒளிவுபுரம் பகுதியில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த திரைப்பட விழா நடைபெறும். இதில் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கல்வி, சமூக நீதி மற்றும் இளைஞர்களின் வாழ்வை பிரதிபலிக்கும் ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட உள்ளன.
Advertisement
திரையிடப்படவுள்ள படங்களில் Happiness Class, Entrance Exam, When the Dust Clears, Messi Maradona உள்ளிட்ட பல்வேறு படைப்புகள் இடம்பெற்றுள்ளன. கல்வி முறைகள், தேர்வு அழுத்தம், குழந்தைகளின் மனநலம், சமூக சமத்துவம் மற்றும் விளையாட்டின் தாக்கம் போன்ற முக்கிய கருத்துகளை இத்திரைப்படங்கள் எடுத்துரைக்கின்றன. இந்த திரைப்பட விழாவை அமுதன் ஆர்.பி. தொகுத்து வழங்குகிறார். மறுபக்கம் (MARUPAKKAM) மற்றும் லென்ஸ் மீடியா சென்டர் இணைந்து நிகழ்ச்சியை நடத்துகின்றன. பார்வையாளர்களுக்கு நுழைவு முற்றிலும் இலவசம். மேலும் விவரங்களுக்கு: 99406 42044 94440 25348
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு