Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 18 செப்டம்பர் 2026 | 2 புரட்டாசி பராபவ வருடம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா; அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகட்டும் - முதல்-அமைச்சர் விஜய்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா; அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பெருகட்டும் - முதல்-அமைச்சர் விஜய்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நாளை (செப்டம்பர் 17) வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்று வருகின்றன. விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் சிறப்புகளை பல நூற்றாண்டுகளாக எடுத்துக்காட்டி வரும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

Advertisement
தமிழர் பண்பாட்டின் உயர்வையும், தமிழகத்தின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் நடைபெறும் இந்த விழாவின் நன்னாளில், இறைவனின் அருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலம், வளம் மற்றும் மகிழ்ச்சி பெருக வேண்டும். நமது பழமையான திருக்கோவில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்புகளையும் தொடர்ந்து பாதுகாத்து, அவற்றின் ஆன்மிகம் மற்றும் பண்பாட்டு பெருமைகளை எதிர்கால தலைமுறைகளுக்கும் கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு