Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் தற்போது 70 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு அணையில் 83 அடி நீர் இருப்பு உள்ளது. பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி முழுக் கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது 67.61 அடி நீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 394 கனஅடி நீர் வரத்து காணப்படுகிறது. இதனால் அணையின் உள்பகுதியில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது.

Advertisement
அருவியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதே நேரத்தில், அருவியைச் சென்று பார்வையிடுவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனா அணையின் நீர்மட்டம் 62 அடியாகவும் (மொத்த கொள்ளளவு 85 அடி), ராமநதி அணையின் நீர்மட்டம் 56 அடியாகவும் (மொத்த கொள்ளளவு 84 அடி) உள்ளது. கருப்பாநதி அணையில் 70 அடி முழுக் கொள்ளளவில் தற்போது 50 அடி நீர் இருப்பு உள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு