பொறியியல் கலந்தாய்வு: 2 சுற்றுகளில் 86,802 இடங்கள் நிரம்பின!
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வு கடந்த ஜூலை 20-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.இதில் முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 3-ந்தேதி நிறைவடைந்தது. பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீடு ஆகிய இரு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 26,851 இடங்கள் நிரப்பப்பட்டன.இதைத்தொடர்ந்து நடைபெற்ற 2-வது சுற்று கலந்தாய்வு நேற்று முடிவடைந்தது.
இந்த சுற்றில் இரு பிரிவுகளிலும் சேர்த்து 59,951 இடங்கள் நிரம்பின.இதன் மூலம் முதல் மற்றும் 2-வது சுற்று கலந்தாய்வு முடிவில், மொத்தமுள்ள 1,96,077 இடங்களில் 86,802 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,09,275 இடங்களுக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கியுள்ளது.இந்த கலந்தாய்வில்பங்கேற்கமொத்தம்1,30,761மாணவர்கள்அழைக்கப்பட்டுள்ளனர்.