பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள்: மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி..!
பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.