பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள்: மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி..!
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

11 Sep 2026 www.thinathulir.com

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள்: மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி..!

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள்: மரியாதை செலுத்தும் எடப்பாடி பழனிசாமி..!

பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணாவின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். இதுதொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாளான செப்டம்பர் 15, 2026 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளும் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், எம்.ஜி.ஆர். மன்றம், அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி, கலைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் என அனைவரும் பெருந்திரளாக பங்கேற்குமாறு தலைமைக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.