பெயரை நீங்கள் மாற்றியது இல்லையா..? - எ.வ.வேலு பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதிலடி
சட்டசபையில் த.வெ.க. அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த 5-ந்தேதியும், வேளாண்மை பட்ஜெட் 6-ந்தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. தொடர்ந்து, இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 7, 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதையடுத்து நிதி அமைச்சர் மரிய வில்சனும், வேளாண்மை அமைச்சர் வினோத்தும் கடந்த 12-ந்தேதி பதிலுரை வழங்கினர்.இதன் தொடர்ச்சியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் 2-வது நாள் சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய அமர்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள், பொதுப்பணி, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.இந்த விவாதத்தின்போது, தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எம்.எல்.ஏ. எ.வ.வேலு பட்டியலிட்டார். அப்போது, காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றி காமராஜர் பெயரை வைப்பதன் அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார். புதிய திட்டத்தை உருவாக்கி அதற்கு காமராஜர் பெயரை சூட்டினால் அதை வரவேற்பதாகவும், ‘முதலமைச்சர்’ என்பது பொதுவான சொல் என்பதால் ‘முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்’ என்ற பெயர் சூட்டப்பட்டதாகவும் எ.வ.வேலு தெரிவித்தார்.‘ஸ்டாலின் காலை உணவுத் திட்டம்’ என பெயர் வைக்கலாம் என்று கூறப்பட்டபோது, அதனை மு.க.ஸ்டாலின் ஏற்கவில்லை என்றும், ‘முதல்வர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் வைத்தால் எதிர்காலத்தில் யாரும் அந்தப் பெயரை மாற்ற முடியாது என்று அவர் கூறியதாகவும் எ.வ.வேலு தெரிவித்தார். மேலும், தாங்கள் உருவாக்கிய திட்டத்தின் பெயரை ஏன் மாற்ற வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.தொடர்ந்து காமராஜருக்கு சென்னையில் சிலை அமைத்து, அப்போதைய பிரதமர் நேருவை அழைத்து வந்து திறப்பு விழா நடத்தியது தி.மு.க.