Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
சனி | 05 செப்டம்பர் 2026 | 20 ஆவணி பராபவ வருடம்

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை – உணவுத்துறை முக்கிய தகவல்

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க கேஸ் சிலிண்டர் ரசீது கட்டாயமில்லை – உணவுத்துறை முக்கிய தகவல்

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கும் போது, கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான ரசீதை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய ரேஷன் கார்டு கோரி இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், விண்ணப்பத்துடன் கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான ரசீதை கட்டாயமாக இணைக்க வேண்டும் என சில வட்ட வழங்கல் அலுவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.ரேஷன் கார்டு கிடைத்த பிறகுதான் கேஸ் சிலிண்டர் இணைப்பை பெற முடியும் என்பதால், இந்த நடைமுறை காரணமாக புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பலர் சிரமப்பட்டனர். இதுதொடர்பாக அரசுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து புகார்கள் சென்றன.இதையடுத்து, உணவுப்பொருள் வழங்கல் துறை துணை கமிஷனர் ராகினி ரவிச்சந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது கேஸ் சிலிண்டர் இணைப்புக்கான ரசீதை கட்டாயமாக இணைக்க வேண்டிய அவசியமில்லை என்றும், அவ்வாறு ரசீதை இணைக்க வேண்டும் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்த பின்னர் 60 நாட்களுக்குப் பிறகே அது கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதேநேரத்தில், விண்ணப்பத்துடன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் ஆதார் அட்டைகளையும் கட்டாயமாக பதிவேற்ற வேண்டும்.

Advertisement
இதனுடன் சொத்து வரி ரசீது, வாடகை ஒப்பந்த பத்திரம், மின் கட்டண ரசீது அல்லது கேஸ் சிலிண்டர் ரசீது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை இணைக்கலாம் என உணவுப்பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு