புதிதாக இயக்கப்படும் 130 தாழ்த்தள ஏசி மின்சார பஸ்கள்: எந்தெந்த வழித்தடங்களில் இயக்கம்?
சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் மின்சார பஸ் சேவை விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக ரூ.697 கோடி மதிப்பீட்டில் 625 தாழ்த்தள மின்சார பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, மத்திய பணிமனை மற்றும் தண்டையார்பேட்டை-1 ஆகிய 5 பணிமனைகளில் இருந்து இயக்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக 2-ம் கட்டமாக 750 புதிய தாழ்த்தள குளிர்சாதன வசதி கொண்ட மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஆலந்தூர், மத்திய பணிமனை-2, பெரம்பூர், பாடியநல்லூர், ஆவடி, கே.கே.நகர் மற்றும் அய்யப்பன்தாங்கல் ஆகிய 7 பணிமனைகள் மூலம் இந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.இந்த 2-ம் கட்ட மின்சார பஸ் சேவையை முதல்-அமைச்சர் விஜய் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதனிடையே, புதிதாக இயக்கப்பட உள்ள 130 தாழ்த்தள குளிர்சாதன மின்சார பஸ்களுக்கான வழித்தடங்களை சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.