தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் தனது 51-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரிலும் சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்தனர்.வெற்றிமாறன் தற்போது சிம்பு நடிக்கும் ‘அரசன்’ மற்றும் ‘ராஜன் வகையறா’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். ‘அரசன்’ படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், படம் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது என சிம்பு ஏற்கனவே தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, ‘ராஜன் வகையறா’ படத்தின் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
Advertisement
இப்படத்தில் அமீர் கதாபாத்திரத்தின் இளமைக்கால வாழ்க்கையை மையமாகக் கொண்ட பகுதிகளில் நடிகர் கென் கருணாஸ் நடித்து வருகிறார்.இந்நிலையில், வெற்றிமாறனின் பிறந்தநாள் விழாவில் ஆளுயர மாலை அணிவித்தல், கேக் வெட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அப்போது அவருக்கு வீரவாள் ஒன்று பரிசாக வழங்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.குறிப்பாக, குழந்தைகள் முன்னிலையில் வெற்றிமாறன் அந்த வீரவாளை கையில் தூக்கிக் காட்டும் காட்சிகளும் வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் இணையத்தில் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளன.