Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 14 செப்டம்பர் 2026 | 29 ஆவணி பராபவ வருடம்

பிரபல நடிகர் சதீஷின் தந்தை மறைவு; வளசரவாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி

பிரபல நடிகர் சதீஷின் தந்தை மறைவு; வளசரவாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களிடம் தனித்துவமான இடம்பிடித்தவர் நடிகர் சதீஷ். கத்தி, எதிர்நீச்சல், நாய் சேகர், கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அவர், ஓ மை கோஸ்ட், வித்தைக்காரன், கான்ஜூரிங் கண்ணப்பன், சட்டம் என் கையில் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படங்கள் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றன.நடிகர் சதீஷின் தந்தை நேற்று உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்த துயரச் செய்தியைத் தொடர்ந்து, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Advertisement
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வமும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.சதீஷின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வினோஜ் பி. செல்வம் தனது சமூக வலைதள பதிவில், “நல்ல மனிதரும், நண்பருமான நடிகர் சதீஷின் தந்தை இன்று காலமானார். வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு இது. நண்பராக அவருக்கு துணையாக இருப்பதே இந்நேரத்தில் என்னால் செய்யக்கூடிய சிறிய ஆறுதல். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு