பிரபல நடிகர் சதீஷின் தந்தை மறைவு; வளசரவாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Jul 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Jul 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

பிரபல நடிகர் சதீஷின் தந்தை மறைவு; வளசரவாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி

பிரபல நடிகர் சதீஷின் தந்தை மறைவு; வளசரவாக்கம் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலி

தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களிடம் தனித்துவமான இடம்பிடித்தவர் நடிகர் சதீஷ். கத்தி, எதிர்நீச்சல், நாய் சேகர், கான்ஜூரிங் கண்ணப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அவர், ஓ மை கோஸ்ட், வித்தைக்காரன், கான்ஜூரிங் கண்ணப்பன், சட்டம் என் கையில் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படங்கள் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பைப் பெற்றன.நடிகர் சதீஷின் தந்தை நேற்று உயிரிழந்தார். அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்த துயரச் செய்தியைத் தொடர்ந்து, உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வமும் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.சதீஷின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வினோஜ் பி. செல்வம் தனது சமூக வலைதள பதிவில், “நல்ல மனிதரும், நண்பருமான நடிகர் சதீஷின் தந்தை இன்று காலமானார். வார்த்தைகளால் ஆறுதல் சொல்ல முடியாத இழப்பு இது. நண்பராக அவருக்கு துணையாக இருப்பதே இந்நேரத்தில் என்னால் செய்யக்கூடிய சிறிய ஆறுதல். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார்.