Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 10 அக்டோபர் 2026 | 24 புரட்டாசி பராபவ வருடம்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு... விவசாயிகள் மகிழ்ச்சி!

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு... விவசாயிகள் மகிழ்ச்சி!

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாகத் திகழும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அதன் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் அணையின் நீர்மட்டம் சுமார் 2 அடி உயர்ந்திருப்பது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானிசாகர் அணையின் முழுக் கொள்ளளவு உயரம் 105 அடியாகும். நீலகிரி மலைப்பகுதியில் உருவாகி மேட்டுப்பாளையம் வழியாக வரும் பவானி ஆறும், கூடலூர் மலைப்பகுதியில் இருந்து தெங்குமரஹடா வழியாக வரும் மாயாறும் அணைக்கு முக்கிய நீர்வரத்து ஆதாரங்களாக உள்ளன. கடந்த சில மாதங்களாக அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், நீர்மட்டம் வேகமாகக் குறைந்து 50 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் நீர்த்தேக்கப் பகுதியில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் வண்டல் மண்ணைச் சேகரித்து வருகின்றனர். இதற்கிடையே, பாசனத் தேவைக்காக அணையிலிருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதால் நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. மேலும், கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவும் கணிசமாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அணைக்கு வினாடிக்கு 2,436 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. இந்த அளவு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,488 கன அடியாக உயர்ந்தது.

Advertisement

அதேபோல், கடந்த 7-ஆம் தேதி மாலை 6 மணிக்கு 54.38 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 56.59 அடியாக அதிகரித்துள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு