Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 22 செப்டம்பர் 2026 | 6 புரட்டாசி பராபவ வருடம்

பிரதமர் மோடி தலைமையின் கீழ்... நீர் பகிர்வுக்காக 7 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்; துணை ஜனாதிபதி பெருமிதம்

பிரதமர் மோடி தலைமையின் கீழ்... நீர் பகிர்வுக்காக 7 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்; துணை ஜனாதிபதி பெருமிதம்

பிரதமர் மோடியின் தலைமையில் நீர் பகிர்வு தொடர்பாக 7 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பாராட்டியுள்ளார். புதுடெல்லியில் இன்று நடைபெற்ற 9-வது இந்திய சர்வதேச நீர் வாரம் 2026 நிகழ்ச்சியை துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, நீர் பற்றாக்குறை தொடர்ந்து பெரும் சவாலாக இருந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், விலைமதிப்பற்ற இயற்கை வளமான தண்ணீரைப் பாதுகாப்பது குறித்து மக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். தண்ணீர் பற்றாக்குறை நிலவும் பகுதியில் இருந்து வந்துள்ளதாகத் தெரிவித்த அவர், தங்களது பகுதியில் ஆயிரம் அடி ஆழத்தில் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்காத நிலை இருந்ததாகக் கூறினார். இதனால், அங்கு விவசாயம் செய்வது மிகவும் சிரமமான பணியாக இருந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும், தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் ஏற்படக்கூடும் என்று உலகின் பல்வேறு அறிவாளிகள் தொடர்ந்து எச்சரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு 19 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் ரத யாத்திரை மேற்கொண்டதைச் சுட்டிக்காட்டிய அவர், அப்போது ஆறுகளை இணைப்பது உள்ளிட்ட ஐந்து முக்கிய அம்சங்களை முன்வைத்ததாகக் கூறினார். நீரை அனைவருக்கும் நியாயமான முறையில் பயன்படுத்துவதுடன், நீர் மேலாண்மையில் ஒருங்கிணைந்த அணுகுமுறையும் அவசியம் என வலியுறுத்தினார். தொடர்ந்து, பிரதமர் மோடியின் தலைமையைப் பாராட்டிய துணை ஜனாதிபதி, நீர் பகிர்வு தொடர்பாக 10 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவித்தார். கடந்த இரண்டு நாட்களில் இமாசலப் பிரதேசம், உத்தராகண்ட், ராஜஸ்தான், அரியானா, உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்கள் நீர் பகிர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனை சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதுவதாகவும் சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்தார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,270
🥈 Silver ₹260.00
Petrol ₹108.50
🛢️ Diesel ₹100.30
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு