பயணிகள் கவனத்திற்கு: மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி; தென் மாவட்ட ரெயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்
மதுரை ரெயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, தென் மாவட்டங்களில் இயக்கப்படும் சில முக்கிய ரெயில்கள் குறிப்பிட்ட நாட்களில் மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து திருச்சி ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், சில ரெயில்களின் வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரெயில் (எண்: 16848): ஆகஸ்ட் 1, 2, 3, 4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கொடைரோடு, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ஆகிய நிலையங்களில் நிற்காது. இந்த ரெயில் மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சிக்கு இயக்கப்படும். நாகர்கோவில் - மும்பை சி.எஸ்.டி.எம். விரைவு ரெயில் (எண்: 16352): ஆகஸ்ட் 2 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொடைரோடு, திண்டுக்கல் ரெயில் நிலையங்களை தவிர்த்து, மதுரை - மானாமதுரை - சிவகங்கை - காரைக்குடி - புதுக்கோட்டை வழித்தடத்தில் திருச்சி சென்றடையும். கன்னியாகுமரி - ஹவுரா அதிவிரைவு ரெயில் (எண்: 12666): கொடைரோடு மற்றும் திண்டுக்கல் நிலையங்களை தவிர்த்து, மதுரையில் இருந்து மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சிக்கு இயக்கப்படும்.