Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

பொதுமக்களிடம் எச்.ஐ.வி. விழிப்புணர்வு: தொடங்கி வைத்தார் மேயர் பிரியா

பொதுமக்களிடம் எச்.ஐ.வி. விழிப்புணர்வு: தொடங்கி வைத்தார் மேயர் பிரியா

சென்னை மாநகராட்சி பகுதிகளில் எச்.ஐ.வி./எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்றுகள் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் மற்றும் பிரசாரப் பேரணியை மேயர் ஆர். பிரியா இன்று (செப்டம்பர் 3) தொடங்கி வைத்தார்.சென்னை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தன. ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், எச்.ஐ.வி./எயிட்ஸ் மற்றும் பால்வினை நோய்த்தொற்றுகள் தொடர்பான விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தீவிர பிரசார இயக்கம் தொடங்கப்பட்டது.தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி, மாநிலம் முழுவதும் எச்.ஐ.வி./எயிட்ஸ் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னையில் எச்.ஐ.வி. பரிசோதனை, நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், சிகிச்சை பெறுதல் உள்ளிட்டவற்றின் அவசியம் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்க இந்த பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், எச்.ஐ.வியுடன் வாழும் நபர்களுக்கு எதிரான களங்கம் மற்றும் பாகுபாட்டை தவிர்ப்பதன் அவசியமும் வலியுறுத்தப்படுகிறது.பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், எச்.ஐ.வி./எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்ற ஒட்டு வில்லைகளை 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் மேயர் பிரியா ஒட்டினார்.

Advertisement
தொடர்ந்து நடைபெற்ற எச்.ஐ.வி./எயிட்ஸ் விழிப்புணர்வு நாட்டுப்புற கலைநிகழ்ச்சியையும், கல்லூரி மாணவிகளின் திடீர் நடன நிகழ்ச்சியையும் அவர் பார்வையிட்டார்.இதையடுத்து, அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லூரிகள், அரசு கலைக்கல்லூரி மற்றும் அறிஞர் அண்ணா சித்தா கல்லூரிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியை மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.ரிப்பன் கட்டட வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி, பெரியமேடு சாலை வழியாகச் சென்று நேரு உள்விளையாட்டரங்கம் அருகே நிறைவடைந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர் எச்.ஐ.வி./எயிட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ். சமீரன், இணை ஆணையாளர் (பணிகள்) செ. சரவணன், நிலைக்குழுத் தலைவர் (பொதுசுகாதாரம்) கோ. சாந்தகுமாரி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலரும் மாநகர நல அலுவலருமான டாக்டர் எம். ஜெகதீசன், மாவட்ட திட்ட மேலாளர் டாக்டர் ஏ. கார்த்திகேயன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு