பட்டியல் இன மாணவர்களின் வாழ்வை சிதைக்கும் த.வெ.க அரசு - தி.மு.க. குற்றச்சாட்டு
த.வெ.க. ஆட்சி அனைத்துப் பிரச்சினைகளையும் மறைக்கும் வகையில் செயல்பட்டு வருவதாக தி.மு.க. சட்டத்துறை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ.பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:த.வெ.க. ஆட்சியில் 8 பட்டியலின அமைச்சர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், ஒரு தலித் மாணவர் தனது ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதாரத் தடையின்றி பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் வெளிநாடுகளில் உயர்கல்வி பயில வேண்டும் என்ற நோக்கில், அன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அறிமுகப்படுத்திய திட்டமே அண்ணல் அம்பேத்கர்அயலகஉயர்கல்விஉதவித்தொகைத்திட்டம்.இந்தத்திட்டத்தின்கீழ்வெளிநாட்டுபல்கலைக்கழகங்களில்உயர்கல்விபயிலும்மாணவர்களுக்குவழங்கவேண்டியநிதியுதவியைத.வெ.க.அரசுதாமதப்படுத்திவருவதாகஅவர்தெரிவித்துள்ளார்.தகுதியுள்ளஎஸ்.சி.,எஸ்.டி.மாணவர்கள்வெளிநாடுகளில்உள்ளமுன்னணிபல்கலைக்கழகங்களில் முதுகலை, பிஎச்.டி. மற்றும் முதுமுனைவர் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்தத் திட்டத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. குடும்ப வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு கல்விக் கட்டணம், வாழ்க்கைச் செலவு உள்ளிட்டவற்றுக்காக ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.36 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுவதுடன், விசா, விமானப் பயணம், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட செலவுகளும் ஏற்கப்படுகின்றன. வெளிநாட்டில் உயர்கல்வி செல்ல விரும்பும் மாணவர்களுக்கு விசா மற்றும் தகுதித் தேர்வுகளுக்கான பயிற்சிகளும் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தி.மு.க. ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்தத் திட்டம், தற்போதைய ஆட்சியில் நிதி தாமதத்தால் மாணவர்களை பாதிக்கும் நிலைக்கு சென்றுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் திசுப் பொறியியல் மற்றும் மீளுருவாக்க மருத்துவத் துறையில் இரண்டாம் ஆண்டு பிஎச்.டி. படித்து வரும் மதுரையைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன், நிதி தாமதம் தொடர்பாக வீடியோ வெளியிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.2023-ல் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் மலேசியா சென்ற பாரதிதாசனுக்கு, முதல் ஆண்டுக்கான 2024 கல்விக் கட்டணத்தை அரசு வழங்கியதாகவும், ஆனால் 2025-26ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் மற்றும் வாழ்க்கைச் செலவுக்கான நிதி இன்னும் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் கிடைக்க வேண்டிய நிதி 5 மாதங்களாக வழங்கப்படவில்லை என்றும் பாரதிதாசன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அமைச்சர் மற்றும் துறைச் செயலாளருக்கு 12 முறை மின்னஞ்சல் அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை எனவும், நிதி இல்லாததால் மருத்துவ ஆராய்ச்சி பாதிக்கப்பட்டு நண்பர்களிடம் கடன் பெற்று வாழ்க்கையை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.பாரதிதாசனின் வீடியோ பரவலான பின்னர், அவர் செலவின ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்கவில்லை என்பதே நிதி தாமதத்துக்குக் காரணம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்படுவதாகவும், இது உண்மையை மறைக்கும் முயற்சி என்றும் இ.பரந்தாமன் விமர்சித்துள்ளார்.இந்த விவகாரத்தில் துறை அமைச்சர் வன்னி அரசு வெளியிட்ட அறிக்கையும் அரசின் தவறை மறைப்பதாகவே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாரதிதாசனுக்கு ஏற்கெனவே நிதி வழங்கப்பட்ட தேதிகளை அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாகவும், அந்த நிதிகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அப்படியானால் தி.மு.க. ஆட்சியில் நிதியுதவி பெற்ற மாணவருக்கு த.வெ.க. ஆட்சியில் தொடர்ந்து நிதி கிடைக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.பாரதிதாசன் ஏப்ரல் மாதமே தேவையான ஆவணங்களை அனுப்பியதாகவும், மின்னஞ்சல் மூலம் தொடர்ந்து நினைவூட்டியதாகவும், அவரது பெற்றோரும் அமைச்சரை நேரில் சந்தித்து தெரிவித்ததாகவும் இ.பரந்தாமன் கூறியுள்ளார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஏற்பட்ட மன உளைச்சலிலேயே அவர் வீடியோ வெளியிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.மேலும், அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் மற்றொரு முக்கிய பிரச்சினையும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு வழங்கும் உதவித்தொகைக்கான ஆவணங்களை இங்கிலாந்தின் முன்னணி பல்கலைக்கழகங்கள் அதிகாரப்பூர்வ நிதி ஆதாரமாக ஏற்க மறுப்பதாகவும், இதனால் இந்த ஆண்டு வெளிநாடு செல்ல உள்ள 300-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.இங்கிலாந்தில் கல்விபயில இந்த ஆண்டு விண்ணப்பித்த 316மாணவர்களின் விசாவிண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண பிரிட்டன் தூதரகம் மற்றும் இங்கிலாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் தி.மு.க. ஒன்றிய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட தூதரக அதிகாரிகளிடம் தொடர்ந்து கடிதங்கள் மூலம் பிரச்சினையை எடுத்துச் செல்வதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, ஒன்றிய அரசுடன் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளதா, சமூகநீதித் துறை அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளாரா என்பதற்கான பதில் இல்லை என்றும் இ.பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் கோவி.செழியன் இந்த விவகாரத்தை எழுப்பியபோதும், அமைச்சர் வன்னி அரசு அதே விளக்கத்தையே தெரிவித்ததாகவும், பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கையைவிட குற்றச்சாட்டு மற்றும் பழிவாங்கும் நோக்கமே அவரது பதிலில் வெளிப்பட்டதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.பட்டியல் இன மாணவர்களின் உயர்கல்விக்காக திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டத்தை முடக்கும் வகையிலேயே த.வெ.க. அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் இ.பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.ஒன்றிய பா.ஜ.க. அரசு பட்டியல் இன மாணவர்களுக்கான பல்வேறு கல்வி நிதியுதவிகளை நிறுத்தியுள்ளதாகவும், அதே பாதையில் தமிழ்நாட்டில் உள்ள த.வெ.க. கூட்டணி அரசும் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக தலித் மாணவர்களின் உழைப்பையும் எதிர்காலக் கனவுகளையும் பாதிக்கும் இந்த ஆட்சியின் செயல்பாடுகளுக்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள் என்றும் அறிக்கையில் இ.பரந்தாமன் தெரிவித்துள்ளார்.