Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 28 செப்டம்பர் 2026 | 12 புரட்டாசி பராபவ வருடம்

பசிபிக், அட்லாண்டிக் கடலில் ஒரே நேரத்தில் உருவான 5 புயல்கள்: 3 நாடுகளை தாக்க வாய்ப்பு

பசிபிக், அட்லாண்டிக் கடலில் ஒரே நேரத்தில் உருவான 5 புயல்கள்: 3 நாடுகளை தாக்க வாய்ப்பு

எல் நினோ மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாக பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதிகளில் ஒரே நேரத்தில் 5 புயல்கள் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல நாடுகளுக்கு புயல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகரித்து வருவதால், ஒரே நேரத்தில் பல தீவிர புயல்கள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். இந்நிலையில், பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடல் பகுதிகளில் போலோ, சரிகே, நோலோ, ஓடாலிஸ், ரேச்சல் ஆகிய 5 புயல்கள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளன. இதில் போலோ, சரிகே, நோலோ ஆகிய 3 புயல்கள் வேகமாக வலுப்பெற்று அதிதீவிர புயல் நிலையை எட்டியுள்ளன. ஓடாலிஸ் மற்றும் ரேச்சல் ஆகிய மற்ற இரு புயல்களும் நடுத்தர புயல்களாக வலுப்பெற்றுள்ளன. மேலும், கடல் பகுதியில் 3 புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களும் உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடுகளை நோக்கி நகரும் புயல்கள் கிழக்கு பசிபிக் பகுதியில் மெக்சிகோ கடற்கரையை ஒட்டி உருவான ஒரு புயல், குறுகிய காலத்தில் தீவிரமடைந்து கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. மற்றொரு புயல் பசிபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் நிலைகொண்டு, ஹவாய் தீவுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கு பசிபிக் பகுதியில் உருவான மற்றொரு புயல் தைவானை நோக்கி நகரும் நிலையில், தொடர்ந்து வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி வருகிறது.

Advertisement
மெக்சிகோ, அமெரிக்கா, ஓகினாவாவுக்கு அச்சுறுத்தல் இந்த புயல்களின் தாக்கத்தால் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் ஜப்பானின் ஓகினாவா தீவுப் பகுதிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. புயல்கள் கடலோர மற்றும் தீவுப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருவதால், அந்தந்த நாடுகளின் வானிலை மையங்கள் செயற்கைக்கோள் உதவியுடன் அவற்றின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உலகின் பல்வேறு கடல் பகுதிகளில் ஒரே நேரத்தில் பல புயல்கள் உருவாவது வழக்கமான நிகழ்வாக இருந்தாலும், ஒரே சமயத்தில் 3 புயல்கள் தீவிர நிலையை அடைவது அரிதானதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பகுதியில் ஒரே நேரத்தில் 3 அதிதீவிர புயல்கள் உருவாகியிருந்தன. கடல் நீரின் வெப்பநிலை சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்து வருவதால், சாதாரண காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள்கூட குறுகிய காலத்தில் வேகமாக வலுப்பெற்று தீவிர புயல்களாக மாறும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது உருவாகியுள்ள புயல்களின் நகர்வு, அவற்றின் தீவிரம் மற்றும் கரையைக் கடக்கும் சாத்தியம் ஆகியவற்றை வானிலை ஆய்வு மையங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,765
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு