நேபாளத்திற்கு இந்தியா அனுப்பிய நிவாரணப் பொருட்கள்: பெட்டிகளில் இடம்பெற்ற வாசகம் என்ன?
பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களுக்கு இந்திய அரசு நிவாரண உதவிகளை அனுப்பியுள்ளது. இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் அவசரகால நிவாரணப் பொருட்கள் நேபாளத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.முதல் கட்டமாக 10 டன் நிவாரணப் பொருட்களும், இரண்டாவது கட்டமாக 37.5 டன் பொருட்களும் அனுப்பப்பட்டன. இதன்படி, காசியாபாத்தில் இருந்து நேபாள தலைநகர் காத்மண்டுவுக்கு மொத்தம் 47.5 டன் நிவாரணப் பொருட்கள் சென்றடைந்துள்ளன.இந்த நிவாரணத் தொகுப்பில் தற்காலிக கூடாரங்கள், போர்வைகள், தூக்கப் பைகள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள், சூரியசக்தி விளக்குகள், சுகாதாரப் பொருட்கள், குளோரின் மாத்திரைகள் மற்றும் குடிநீர் பாட்டில்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.அனைத்து பொருட்களும் அட்டை பெட்டிகளில் பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. இந்த பெட்டிகளில் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஒரு வாசகமும் இடம்பெற்றுள்ளது.