Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

நெல்லை: இரவோடு இரவாக திறக்கப்பட்ட மதுபானக் கடை; கிராம மக்கள் முற்றுகை

நெல்லை: இரவோடு இரவாக திறக்கப்பட்ட மதுபானக் கடை; கிராம மக்கள் முற்றுகை

நெல்லை மாவட்டம் காடன்குளம் பகுதியில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே மதுபானக் கடை மற்றும் பார் அமைக்கப்பட்டு, நேற்று இரவு திடீரென விற்பனை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி கிராம மக்கள், மதுபானக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Advertisement
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் போராட்டம் நடைபெற்ற நிலையில், அந்த பகுதியில் மதுபானக் கடை திறக்கப்படாது என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு