நெல்லை: இரவோடு இரவாக திறக்கப்பட்ட மதுபானக் கடை; கிராம மக்கள் முற்றுகை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

நெல்லை: இரவோடு இரவாக திறக்கப்பட்ட மதுபானக் கடை; கிராம மக்கள் முற்றுகை

நெல்லை: இரவோடு இரவாக திறக்கப்பட்ட மதுபானக் கடை; கிராம மக்கள் முற்றுகை

நெல்லை மாவட்டம் காடன்குளம் பகுதியில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே மதுபானக் கடை மற்றும் பார் அமைக்கப்பட்டு, நேற்று இரவு திடீரென விற்பனை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி கிராம மக்கள், மதுபானக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலிலும் அவர்கள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் போராட்டம் நடைபெற்ற நிலையில், அந்த பகுதியில் மதுபானக் கடை திறக்கப்படாது என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.