Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

நாளை சென்னை வரும் ராகுல் காந்தி.. கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்!

நாளை சென்னை வரும் ராகுல் காந்தி.. கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்!

நாளை சென்னை வரும் ராகுல் காந்தி.. கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்! காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாளை (அக். 10) சென்னை வருகை தர உள்ளார். அப்போது கல்லூரி மாணவர்களைச் சந்தித்து, அவர்களுடன் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார். நாடு முழுவதும் மாணவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சவால்கள் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்து வருகிறார். இதன் ஒரு பகுதியாகச் சென்னையில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், கல்வி முறை, தேர்வுகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக மாணவர்களின் கருத்துகளைக் கேட்கத் திட்டமிட்டுள்ளார்.

Advertisement
இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைத் தமிழக காங்கிரஸ் கமிட்டி மேற்கொண்டு வருகிறது. கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களும் இதில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக நாளை காலை விமானம் மூலம் சென்னை வரும் ராகுல் காந்தி, தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளையும் சந்திக்க உள்ளார். இந்தச் சந்திப்பின்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு