Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வெள்ளி | 09 அக்டோபர் 2026 | 23 புரட்டாசி பராபவ வருடம்

வெங்காய விலையைக் கட்டுப்படுத்த 3-வது கட்ட நடவடிக்கை: 700 டன் கொள்முதல்!

வெங்காய விலையைக் கட்டுப்படுத்த 3-வது கட்ட நடவடிக்கை: 700 டன் கொள்முதல்!

தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மூன்றாவது கட்டமாக 700 மெட்ரிக் டன் வெங்காயத்தைத் தமிழக அரசு கொள்முதல் செய்துள்ளது. இதனை நியாயவிலைக் கடைகள் மூலம் ஒரு கிலோ ரூ.35-க்கு விற்பனை செய்யும் பணியை கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் இன்று (அக். 9) தொடங்கி வைத்தார். ஒரு கிலோ வெங்காயம் ரூ.35-க்கு விற்பனை தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றான வெங்காயத்தின் விலை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைத்து, வெங்காயத்தை மலிவு விலையில் கிடைக்கச் செய்யும் வகையில் தமிழக அரசு சந்தை தலையீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் வாயிலாக வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. சட்டமன்றப் பேரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்ததன் அடிப்படையில், மூன்றாவது கட்டமாக மாநிலம் முழுவதும் உள்ள 8,914 நகர்ப்புற நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம், ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்டங்களில் கொள்முதல் இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில், இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான NAFED மூலம் 910 மெட்ரிக் டன் வெங்காயமும், தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையமான NCCF மூலம் 65 மெட்ரிக் டன் வெங்காயமும் கொள்முதல் செய்யப்பட்டன.

Advertisement
இரண்டாவது கட்டத்தில், NAFED மூலம் 1,414.33 மெட்ரிக் டன்னும், NCCF மூலம் 460 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்து விற்பனைக்காக வழங்கப்பட்டன. தண்டையார்பேட்டையில் விற்பனை தொடக்கம் பொதுமக்களிடையே இந்தத் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பையும் தொடர்ந்து நிலவும் தேவையையும் கருத்தில் கொண்டு, தற்போது மூன்றாவது கட்டமாக NCCF நிறுவனத்திடமிருந்து மேலும் 700 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை தண்டையார்பேட்டை சரக்கு ரயில் முனையத்துக்கு வந்தடைந்த வெங்காயத்தை இன்று பார்வையிட்ட அமைச்சர் காந்திராஜ், அவற்றை நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்யும் பணியைத் தொடங்கி வைத்தார். இந்த நடவடிக்கையின் மூலம் வெங்காய விலை உயர்வால் ஏற்படும் செலவுச் சுமையைக் குறைத்து, குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களுக்கு நியாயமான விலையில் வெங்காயம் தொடர்ந்து கிடைக்கச் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிகழ்வில் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) தர்பகராஜ் உள்ளிட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,710
🥈 Silver ₹245.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு