Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 14 நவம்பர் 2026 | 28 ஐப்பசி பராபவ வருடம்

நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 20-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

நாகூர் ஆண்டவர் தர்காவில் நடைபெற உள்ள கந்தூரி விழாவை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வரும் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான புனித சந்தனக்கூடு ஊர்வலம், வரும் 20-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement
இந்த விடுமுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும். அதேநேரத்தில், அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ளும் அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும். ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அரசு தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும். மேலும், நவம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், டிசம்பர் 5-ம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,140
🥈 Silver ₹205.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு