இந்தியப் பொறியியலின் தந்தை எனப் போற்றப்படும் சர் எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி, ஆண்டுதோறும் தேசிய பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, முதல்-அமைச்சர் விஜய் பொறியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், சர் எம். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் தினமாகக் கொண்டாடும் இந்த நாளில், நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களித்து வரும் அனைத்து பொறியியல் வல்லுநர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை ஆகியவற்றின் உதவியுடன் நவீன இந்தியாவை உருவாக்குவதில் பொறியாளர்களின் பங்களிப்பு முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisement
சாலைகள், பாலங்கள், அணைகள் முதல் விண்வெளி ஆராய்ச்சி, டிஜிட்டல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமை ஆற்றல் வரையிலான பல்வேறு துறைகளின் முன்னேற்றத்தில் பொறியாளர்களின் திறமையும் உழைப்பும் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பொறியாளர்களின் அறிவாற்றலும் புதுமையான சிந்தனையும் வளமான, வலிமையான மற்றும் முன்னேற்றம் நிறைந்த நாட்டை உருவாக்க தொடர்ந்து உதவ வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.