நெல்லையில் 3.4 கிலோ கஞ்சா, கார், பைக் பறிமுதல்: 3 பேர் கைது
திருநெல்வேலி மாநகரின் பெருமாள்புரம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட தீவிர வாகன சோதனையின் போது 3 கிலோ 450 கிராம் கஞ்சா, ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.பெருமாள்புரம் பகுதியில் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை நடத்தினர்.விசாரணையில், பெருமாள்புரம் ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான தினேஷ் (28), தச்சநல்லூர் சத்திரம்புதுகுளத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி மணி என்ற எஸ்டேட் மணி (44), வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்ற தமிழ் சிங்கம் (25) ஆகியோர் 3 கிலோ 450 கிராம் கஞ்சாவை சட்டவிரோதமாக வைத்திருந்தது தெரியவந்தது.இதையடுத்து, அவர்களிடமிருந்து 3.45 கிலோ கஞ்சா, ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், பெருமாள்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினர்.