Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
செவ்வாய் | 15 செப்டம்பர் 2026 | 30 ஆவணி பராபவ வருடம்

சென்னை எம்.ஜி.ஆர். பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் - நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி

சென்னை எம்.ஜி.ஆர். பல்கலை. பட்டமளிப்பு விழாவில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் - நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி

சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு, மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்று, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியது மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்ததாக தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளாக கல்விச் சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.

Advertisement
சண்முகத்துக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். எளிய குடும்பங்களைச் சேர்ந்த பல மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்கி வருவதற்காக அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். மேலும், கல்விப் பயணத்தில் முக்கியமான கட்டத்தை எட்டி பட்டம் பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் நயினார் நாகேந்திரன் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். அவர்கள் பெற்றுள்ள பட்டம், தங்களது அறிவு மற்றும் திறமைகளை சமூகத்துக்கும் நாட்டுக்கும் பயனுள்ளதாக அர்ப்பணிக்கும் புதிய பொறுப்பின் தொடக்கமாக அமைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு