Skip to main content
🌤️ —°C
வெள்ளி | 31 ஜூலை 2026 | 15 ஆடி பராபவ வருடம்

நடிகை கியாரா அத்வானி பிறந்தநாள்: புதிய போஸ்டருடன் வாழ்த்து தெரிவித்த ‘டாக்ஸிக்’ படக்குழு

நடிகை கியாரா அத்வானி பிறந்தநாள்: புதிய போஸ்டருடன் வாழ்த்து தெரிவித்த ‘டாக்ஸிக்’ படக்குழு
நடிகை கியாரா அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்துள்ள **‘டாக்ஸிக்’** திரைப்படத்தின் தயாரிப்பு குழு புதிய சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த போஸ்டரில், கியாரா ஏற்றுள்ள கதாபாத்திரத்தின் பெயர் **‘நாடியா’** என அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளது.2014-ஆம் ஆண்டு வெளியான ‘பேக்லி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கியாரா அத்வானி, தொடர்ந்து ‘எம்.எஸ். தோனி’, ‘கபீர் சிங்’, ‘ஷெர்ஷா’ உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 2023-ஆம் ஆண்டு நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளதுடன், குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் கியாரா, தற்போது நடிகர் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இயக்குநர் கீத்து மோகன்தாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் அவர் ‘நாடியா’ என்ற கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். இதற்கு முன் வெளியான அவரது பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்ததுகேவிஎன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா திரைப்படத்தில் யாஷுடன் இணைந்து நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுட்டாரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு முன்பு ‘லேடீஸ் அண்ட் லேடீஸ்’ என்ற தலைப்பில் படத்தின் கதாநாயகிகளை அறிமுகப்படுத்தும் வீடியோவும் வெளியிடப்பட்டது.1940 முதல் 1970 வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் மற்றும் மாபியா கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு ஆக்ஷன் திரில்லராக ‘டாக்ஸிக்’ உருவாகியுள்ளது.முதலில் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீடு சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.
Advertisement
தற்போது, வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.சமீபத்தில் வெளியிடப்பட்ட டீசர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், அதிலிருந்த சில காட்சிகள் தொடர்பாக விமர்சனங்களும் எழுந்தன. குறிப்பாக, சிலர் அதில் ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கருத்து தெரிவித்ததால், டீசர் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.அதேபோல், படத்தின் ‘தபாஹி’பாடலையும் அண்மையில் படக்குழு வெளியிட்டது. அதன் தமிழ் வரிகளை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இதற்கு முன் வெளியான ‘தடுமாறுதே’ பாடலின் தமிழ் பதிப்பிற்கும் அவரே வரிகளை எழுதியிருந்தார். அந்தப் பாடலின் வீடியோவில் நடிகை நயன்தாரா புகைபிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கியாரா அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்டைலிஷ் மற்றும் மிரட்டலான தோற்றத்தில் கியாரா இடம்பெற்றுள்ள இந்த போஸ்டர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.‘டாக்ஸிக்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வெளியாக உள்ளது.
மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,230
🥈 Silver ₹240.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள் 📸 பட செய்திகள்
📰 இ-பேப்பர் 🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு