Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
சனி | 26 செப்டம்பர் 2026 | 10 புரட்டாசி பராபவ வருடம்

தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு: 2 பேர் கைது

தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு: 2 பேர் கைது

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் சாலையில் நடந்து சென்ற தொழிலாளியை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500 பறித்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (43). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை-திருச்செந்தூர் சாலையில் உள்ள டீக்கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் சங்கரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

Advertisement
இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சந்துரு (26), வேல்முருகன் (23) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,010
🥈 Silver ₹250.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு