தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு: 2 பேர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு: 2 பேர் கைது

தொழிலாளியிடம் கத்தியை காட்டி பணம் பறிப்பு: 2 பேர் கைது

நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் சாலையில் நடந்து சென்ற தொழிலாளியை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.500 பறித்ததாக தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். பாளையங்கோட்டை முப்புடாதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சங்கர் (43). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் பாளையங்கோட்டை-திருச்செந்தூர் சாலையில் உள்ள டீக்கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் சங்கரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டியதுடன், அவரிடம் இருந்த ரூ.500-ஐ பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சங்கர் அளித்த புகாரின் அடிப்படையில் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த சந்துரு (26), வேல்முருகன் (23) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.