Skip to main content
தினத்துளிர்
🌤️ —°C
வெள்ளி | 04 செப்டம்பர் 2026 | 19 ஆவணி பராபவ வருடம்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு வாரங்களாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இன்று நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில், அரசுத் தரப்பில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement
அப்போது, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.தூய்மைப் பணியாளர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை உடனடியாக நிறைவேற்ற அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.அரசின் இந்த சாதகமான நடவடிக்கையைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
தினத்துளிர்
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு