தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

04 Sep 2026 www.thinathulir.com

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு வாரங்களாக தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, சென்னை ரிப்பன் மாளிகையில் தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.இன்று நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தையில், அரசுத் தரப்பில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர். நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து அமைச்சர்கள் கேட்டறிந்தனர்.தூய்மைப் பணியாளர்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை உடனடியாக நிறைவேற்ற அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.அரசின் இந்த சாதகமான நடவடிக்கையைத் தொடர்ந்து, தூய்மைப் பணியாளர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.