Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 15 அக்டோபர் 2026 | 29 புரட்டாசி பராபவ வருடம்

தூத்துக்குடி மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்

தூத்துக்குடி மீனவர்களை மீட்க நடவடிக்கை கோரி மத்திய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்

மாலத்தீவு கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை விடுவிப்பதுடன், அவர்களது 3 மீன்பிடி விசைப்படகுகளையும் மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் தங்களது 3 மீன்பிடி விசைப்படகுகளுடன் கடந்த 13.10.2026 அன்று அதிகாலையில் மாலத்தீவு கடலோரக் காவல்படையினரால் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
மேலும், மாலத்தீவு அரசுடன் தூதரக ரீதியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும், அவர்களது விசைப்படகுகளை விரைவாக மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பாகத் தாயகம் திரும்புவதை உறுதிசெய்ய வேண்டியதன் அவசியத்தையும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உரிய முறையில் தலையிட்டு நடவடிக்கை எடுப்பது, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினருக்கும் ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினருக்கும் நம்பிக்கையையும் ஆறுதலையும் அளிக்கும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,515
🥈 Silver ₹240.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு