Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
திங்கள் | 26 அக்டோபர் 2026 | 9 ஐப்பசி பராபவ வருடம்

தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கிராஜா வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கல்லூரி மாணவர் இசக்கிராஜா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சாத்தான்குளம் படுகொலையின் அதிர்ச்சி மறைவதற்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் ஒரு கொலை நிகழ்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள கனிமொழி, அரிவாளால் தாக்குதல், சிறுமிகள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் அங்கு சட்டம்-ஒழுங்கு நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், தவெக அரசு உரிய கவனம் செலுத்தாமல் மெத்தனமாகச் செயல்படுவதாக அவர் விமர்சித்துள்ளார். மக்களின் பாதுகாப்பைப் புறக்கணிக்கும் போக்கைக் கைவிட்டு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹13,070
🥈 Silver ₹220.00
⛽ Petrol ₹107.76
🛢️ Diesel ₹99.55
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு