தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
26 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை: தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே கல்லூரி மாணவர் இசக்கிராஜா வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், கல்லூரி மாணவர் இசக்கிராஜா கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சாத்தான்குளம் படுகொலையின் அதிர்ச்சி மறைவதற்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் மீண்டும் ஒரு கொலை நிகழ்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள கனிமொழி, அரிவாளால் தாக்குதல், சிறுமிகள் கடத்தல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்களால் அங்கு சட்டம்-ஒழுங்கு நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதைத் தொடர்ந்து சுட்டிக்காட்டியும், தவெக அரசு உரிய கவனம் செலுத்தாமல் மெத்தனமாகச் செயல்படுவதாக அவர் விமர்சித்துள்ளார். மக்களின் பாதுகாப்பைப் புறக்கணிக்கும் போக்கைக் கைவிட்டு, சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.